கொங்கிவயல் ஸ்ரீமுத்துகருப்பைய்யா ஆண்டவர்

ஸ்ரீமுத்துகருப்பய்யா ஆண்டவர்

ஸ்ரீமுத்துகருப்பய்யா ஆண்டவர்

மகான்கள் முதலில் மனிதர்களாகத்தான் அறியப்படுகிறார்கள். சாதாரண வாழ்க்கையில் உழன்று, அதில் இருக்கக் கூடிய கஷ்ட நஷ்டங்களை அனுபவித்த பிறகே, அற்புதங்கள் சிலர் வாழ்க்கையில் நிகழ்கின்றன. இள வயது பருவம் முடிந்ததும், ‘நாம் என்ன ஆக வேண்டும்?’ என்று நாம் விருப்பப்படலாம்; தப்பில்லை. ஆனால், தீர்மானிக்கின்ற உரிமை நம்மிடத்தில் இல்லை. இது இறைவனின் விருப்பம்.

அதுபோல்தான் கொங்கிவயல் கிராமத்தில் சாதாரண குடும்பத்தில் கள்ளர் இனத்தில் பிறந்தவர் – முத்துகருப்பைய்யா (நகரத்தார்கள் ஊரான தேவகோட்டையில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது கொங்கிவயல்). தற்போது இவர் இதே ஊரில் முத்துகருப்பைய்யா ஆண்டவர் சுவாமிகள் என்கிற திருநாமத்தில் சமாதி கொண்டுள்ளார். ஆண்டவர் சுவாமிகளின் 74-ஆம் ஆண்டு குருபூஜை கடந்த 9.12.09 அன்று நடந்துள்ளது. ஆண்டவர் சுவாமிகளின் பக்தர்களுக்கு இது ஒரு மாபெரும் திருவிழா.

ஆடு மாடுகள் மேய்த்து, வயல்வேலைகளைப் பார்த்து வந்த குடும்பம். இறைவன் முத்துகருப்பைய்யாவை ஆட்கொள்ள வேண்டிய வேளையும் வந்தது. கொங்கிவயல் கிராமத்துக்கு அருகே ஒரு சாயபு வசித்து வந்தார். இவர் பார்க்கத்தான் சாதாரணமாக இருப்பாரே தவிர, இறை அருள் நிரம்பப் பெற்றவர். பல ஸித்துக்கள் கைவரப் பெற்றவர். இது கொங்கிவயல் கிராமத்தில் வசிக்கும் பலருக்கேகூடத் தெரியாது. கிராமத்தில் வசிக்கும் குடிமக்களின் வீட்டு வாசலில் நின்று பிச்சை எடுத்து உண்பார். பலரும் இவருக்கு ஒரு பிடி அரிசியும், ஒரு பைசா நாணயமும் கொடுப்பர். இதை வழக்கமாகக் கொண்ட பல குடிமக்களும் உண்டு. இப்படிப் பிச்சையாகக் கிடைத்ததை வைத்து கிராமத்தின் ஒரு எல்லையில் அவற்றைச் சமைத்து உண்பார். அதோடு, எஞ்சி இருக்கும் உணவை அந்த வழியே செல்லும் மற்ற மக்களுக்கும் வழங்குவார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Follow

Get every new post delivered to your Inbox.