
சோம. வள்ளியப்பன்
சொந்த ஊர், தேவகோட்டை. BA பொருளாதாரம், மற்றும் MBA வில் மனித வளமும் படித்திருக்கும் வள்ளியப்பன் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ், தாஜ் இண்டர் காண்டினெண்டல் ,BHEL, பெப்சி, வெர்ல்பூல், டாக்டர் ரெட்டீஸ் பவுண்டெஷன் போன்ற் நிறுவனங்களில் பணிபுரிந்தவர். தற்சமயம் சென்னையில் மனித வளத்துறைன் துணைத்தலைவராக ஒரு தனியார் குழுமத்தில் பணிபுரிகிறார்.
மக்கள் தொலைக் காட்சி, சன், சன் நியூஸ், ஜெயா, ஜெயாபிளஸ்,விஜய், பொதிகை தொலைக் காட்சி கலைங்கர், கலைங்கர் செய்திகள், நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று, பங்குச் சந்தை பற்றியும் மனிதவள மேம்பாடு குறித்தும்தொடர்ந்து பேசி வருகிறார்.
தினமணி நாளிதழிளில் இவர் 4 ஆண்டுகள் தொடர்ந்து நடுப்பக்க கட்டுரைகள் எழுதியிருக்கிறார். ஆனந்த விகடன், குமுதம், நாணயம் விகடன் அமுதசுரபி, நமது நம்பிக்கை போன்ற இதழ்களில் தொடர்கள் எழுதியிருக்கிறார். இவர் எழுதிய, அள்ள அள்ளப் பணம் ( 4 பாகங்கள்) என்ற பங்குச் சந்தை பற்றிய புத்தகம் விற்பனையில் சாதனை படைத்துவருகிற புத்தகமாகும்
இட்லியாக இருங்கள், காலம் உங்கள் காலடியில், தொட்டதெல்லாம் பொன்னாகும், உலகம் உன்வசம், உஷார் உள்ளே பார், யார் நீ, உறுதி மட்டுமே வேண்டும், வாங்க பழகலாம், சிறந்த நிர்வாகி ஆவது எப்படி? நம்பர் 1 சேல்ஸ்மென் உட்பட இதுவரை 25 புத்தகங்கள் எழுதியிருக்கிறார்.
தொலைகாட்சி நிகழ்ச்சிகள்
மக்கள் தொலைக் காட்சி
50 நிகழ்ச்சிகளுக்கும் அதிகமாக- வளாகம்- பங்குச் சந்தை பற்றிய, ஒரு மணி நேர நேரலை நிகழ்ச்சிகள்
சிந்திக்க சில நிமிடங்கள்- காலை நேரத்தில் – 20 க்கும் அதிகமான நிகழ்ச்சிகள்
தமிழ் புத்தாண்டு போன்ற சிறப்பு நிகழ்சிகளில்
கலைஞர் தொலைக்காட்சி
கற்றதும் பெற்றதும் நிகழ்ச்சி – சுயமுன்னேற்றம் பற்றிய 5 நிமிட ஒளிபரப்பு- 15 குக் அதிகமான நிகழ்ச்சிகள்.
கலைஞர் செய்திகள் தொலைக் காட்சி
செய்திகளில்- பொருளாதாரம் மற்ரும்பங்குச் சந்தை நிலவரம் குறித்த கருத்துக்கள்- பல முறை
வணிகம் வசப்படும் நேரலை நிகழ்ழ்ச்சியில்- சிறப்பு விருந்தினராக- மூன்று முறை
சன் தொலைக் காட்சி
வணக்கம் தமிழகத்தில் சிறப்பு விருந்தினராக- இரு முறை
சன் நியூஸ்
சந்திப்போம் சிந்திப்போம் நிகழ்ச்சிகளில், செய்திகளில் , பொருளாதாரம் மற்றும் பங்குச் சந்தை நிலவரம் குறித்த கருத்துக்கள்- பல முறை
ஜெயா தொலைக்காட்சி
காலை மலரில்- சிறப்பு விருந்தினராக
மதிய நேர நேரலைகளில்
ஜெயா பிளஸ்
செய்திகளில்- பொருளாதாரம் மற்றும் பங்குச்சந்தை நிலவரம் குறித்த கருத்துக்கள்
பொதிகை தொலைக்காட்சி
காலைத் தென்றல்- நேரலை நிகழ்ச்சியில் சனிக்கிழமைகளில், பங்குச் சந்தை குறித்து
உங்களுக்குத் தெரியுமா? நேரலை
பொருளாதாரம் குறித்த நிகழ்ச்சிகள்- செய்தி விமரிசனம்
விஜய் தொலைக்காட்சி
நீயா நானா – படிக்காத கோடீஸ்வரர்கள் நிகழ்ச்சியில், இரு சிறப்பு அழைப்பாளர்களில் ஒருவராக.
பத்திரிக்கைகளில் எழுதியது
தினமணி நாளிதழில் நடுபக்க கட்டுரைகள்
மனித வளம் மற்றும் வாழ்வியல் தொடர்பாக 50 க்கும் அதிகமான கட்டுரைகள்- மாதம் ஒன்று வீதம் 4 ஆண்டுகளுக்கு மேலாக-
தினகரன் நாளிதழில்
நிதி பற்றிய விளக்கங்கள் தொடர்ந்து பல வாரங்களுக்கு
ஆனந்த விகடன் இதழில்
29 வாரங்களுக்கு தொடராக- பணம் பண்ணலாம் பணம் பணம்- சாதாரண மனிதர்கள் வியாபாரங்கள் செய்து அடைந்த வெற்றிகள் குறித்த உதாரணங்கள் விளக்கங்களுடன்.
நாணயம் இதழில்
சேமிப்பு பற்றிய தொடர் கட்டுரைகள்- ஓர் ஆண்டிற்கு.
அமுதசுரபி இதழில்
சின்ன தூண்டில் பெரிய மீன் எனும் சுய முன்னேற்ற தொடர்
மங்கையர் மலர் மாத இதழில்
பல் சுயமுன்னேற்றக் கட்டுரைகள் – 1990 களில் எஸ்.எம்.வி என்ற பெயரில்
நமது நம்பிக்கை மாத இதழில்
முன்னேற்றம் இந்தப்பக்கம் – 19 மாதங்கள்
காலம் உங்கள் காலடியில் – 12 மாதங்களுக்கும் மேலாக தொடர்கிறது
கிராஸ் ரூட் இதழில்
கனவு தேசம் என்ற தொடர்- 10 இதழ்களுக்கும் மேலாக
குமுதம் இதழில்
பணம் பண்ன நீங்க ரெடியா? தொடர் – 19 வாரங்கள்- பங்குச் சந்தை பற்றியது
பணமே ஓடிவா! – 29 வாரங்கள்- சுயமுன்னேற்றம் மற்ரும் பண முதலீடுகள் தொடர்பாக
பணம்: சில சந்தேகங்கள்- சில விளக்கங்கள்- 20 வாரங்களுக்கும் மேலாக எழுதிய கேள்வி பதில் பகுதி
சிறுகதைகள்
பிரசுரமானவை 38, இலக்கிய சிந்தனை அமைப்பின் சிறந்த மாத சிறுகதையாக தேர்வு செய்யபட்டது : 1
எழுதிய புத்தகங்கள்
கிழக்கு பதிப்பகம்
மணிவாசகர் பதிப்பகம்
| 23 | ![]() |
திட்டமிடுவோம் வெற்றி பெறுவோம் |
| 24 | ![]() |
மகிழ்ச்சி எங்கே ? (தினமணி நடுபக்க கட்டுரைகளின் முதல் தொகுப்பு) |
மணிமேகலை பிரசுரம்
| 25 | நான் உனக்காக நீ எனக்காக (சிறுகதை தொகுப்பு) |
விஜயா பதிப்பகம்
| 26 | ![]() |
அதிகாரம் அல்ல, அன்பு (தினமணி கட்டுரைகளின் 2ம் தொகுப்பு) |
| 27 | தடையொன்றும் இல்லை (தினமணி கட்டுரைகளின் 3ம் தொகுப்பு) | |
| 28 | ![]() |
பணமே ஓடிவா! (பணத்தினை சேமிப்பது, முதலீடுசெய்வது-பல்வேறு வாய்ப்புகள்-குமுதத்தில் வந்த தொடர்) |





























